பொதுமக்கள் குறைகேட்பு அமைப்பு - ஆலந்தூர் தொகுதி

"வளமான ஆலந்தூர்" செயலியின் (APP) செயல்முறை

"வளமான ஆலந்தூர்" செயலி (APP) ஆலந்தூர் தொகுதியை சார்த்த பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறியும் வகையில் மக்கள் எளிதில் பயன்படுத்தவும் உருவாக்கப்பட்ட செயலியாகும்.
இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் பொறுப்புடன் நமது தொகுதியில் உங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் மற்றும் குறைகளை உடனடியாக பதிவு செய்தால், அதை உடனுக்குடன் தீர்க்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.
செயல்முறை:

1. பொதுமக்களாகிய நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் மற்றும் குறைகளை உரிய விவரங்கள் மற்றும் புகைப்பட ஆவணங்களுடன் பதிவு செய்யவேண்டும்.
2. அப்படி பதிவு செய்யும் கோரிக்கைக்கு பதிவு எண் உடனடியாக கொடுக்கப்படும் மற்றும் குறும்செய்தி வாயிலாகவும் அனுப்பப்படும்.
3. பதிவு செய்த நாளில் இருந்து கோரிக்கைகள் மற்றும் குறைகளை உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
4. பதிவு செய்யப்பட்ட கோரிக்கைகளின் நிலைகளை பதிவு எண்ணைக்கொண்டு நீங்கள் செயலியின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
5. பதிவு செய்த நாளில் இருந்து கோரிக்கைகள் மற்றும் குறைகளின் தன்மையை பொருத்து 24 மணி நேரம் முதல் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6. கோரிக்கை நிறைவேற்றப்பட்ட உடன் அதுவும் குறும்செய்தி வாயிலாக செய்தி வாயிலாக தெரியப்படுத்தப்படும்.
7. நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் மற்றும் குறைகளை குறித்து உங்கள் கருத்துக்களை இந்த செயலியின் மூலம் பதிவுசெய்யலாம்.
இந்த செயலியின் முக்கியமான அம்சங்கள்

வெளிப்படையான அமைப்பு: பதிவு செய்யப்படும் அனைத்து எல்லா கோரிக்கைகள் மற்றும் குறைகளின் நிலையை எளிதாக காணக்கூடிய வகையில் செயல்படுகிறது.
பல்வேறு முறைகள் மூலம் பதிவு செய்யலாம்: கோரிக்கைகள் மற்றும் குறைகளை அழைப்பு மையம் மூலமாகவும் வலைத்தளம் மூலமாகவும், மொபைல் செயலி மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
வலுவான செயல்படுத்தும் முறை : பதிவு செயப்படும் ஒவ்வொரு கோரிக்கைகள் மற்றும் குறைகளையும் சரிபார்த்து, அதனை உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பிவைத்து, அதனை தாமதமின்றி தீர்வுகாண உதவுகிறது.
பதிவு எண்: ஒவ்வொரு கோரிக்கைகள் மற்றும் குறைகளும் ஒரு தனிப்பட்ட பதிவு எண்ணைப் பயன்படுத்தி அதன் தற்போதைய நிலை கண்காணிக்கப்படும்.
ஸ்மார்ட்போன் செயல்பாடு: எல்லாவித ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலமாகவும் கோரிக்கைகள் மற்றும் குறைகளை பதிவு செய்யலாம்.
கூகுள் ஒருங்கிணைப்பு: புகைப்படங்களை இணைப்பதற்கும் கூகுள் வரைப்படத்துடன் ஒருங்கிணைப்பதற்கும் உதவுகிறது.
அறிவிப்புகள்: கோரிக்கைகள் மற்றும் குறைகளின் பல்வேறு நிலைகளில் பதிவு செய்தவர் குறுஞ்செய்திகளைப் பெறுகின்றனர்; நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகளும் அதன் நிலையை பதிவு செய்யலாம்.
கருத்து பதிவு செய்தல்: சேவை கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு, பதிவு செய்த நபர் தீர்வு திருப்திகரமாக இல்லாவிட்டால் அதன் கருத்துக்களை வழங்கலாம்.