பொதுமக்கள் குறைகேட்பு அமைப்பு - ஆலந்தூர் தொகுதி

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான நல்லாட்சி பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை உடனுக்குடன் தீர்த்து வைத்து மக்களுக்கான ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட நமது மாண்புமிகு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட "வளமான ஆலந்தூர்" செயலி (APP) ஆலந்தூர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"வளமான ஆலந்தூர்" செயலியில் (APP) ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களை பதிவு செய்து கொண்டு தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படும் சாலைகள் மற்றும் நடைபாதைகள், தெருவிளக்குகள், குப்பைகள், மழை நீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள், கொசுக்கள், விலங்குகள், பொது கழிப்பறைகள், நில மீறல்கள், போக்குவரத்து, பொது தொல்லைகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளை மற்றும் குறைகளை பதிவு செய்தால் அது எங்களது பார்வைக்கு நேரடியாக கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஆலந்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வளமான ஆலந்தூர் தோகுதியை உருவாக்க பங்களிக்க வேண்டுகிறோம்.